துபாய்: உலக வெப்பமயமாதலால் அண்டார்டிகாவில் இருந்து பிரிந்து வரும் பனிப்பாறைகள் பயன்படுத்தி சுத்தமான நீர் பெறுவதே ஐக்கிய அரபு அமீரகத்தின் பணிப்பாறைத் திட்டம்.
பனிப்பாறைகளில் இருந்து சுத்தமான நீர் உருகி விடுகின்றது, இதனை தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு பயன்படுத்துவது இதன் நோக்கம் என துபாயின் நேஷனல் அட்வைசர் தலைமை நிர்வாகி அப்துல்லா அல்ஷே ஹி கூறியுள்ளார்.
இந்த வகை பனிப்பாறைகள் கப்பல் மற்றும் வேறு வழிகளில் கொண்டுவராமல் கடல் நீர் வழியாக இழுத்து வரப்படும். இதன் மூலம் 30% நீர் மட்டுமே கடலில் கலந்து வீணாகிறது. நீரில் 300 முதல் 500 மில்லியன் கியூபிக் கேலன்கள் அளவிற்கு நீர் நிறைந்துள்ளது. அதனால் இழந்த நீரைத் தவிர மற்ற நீரை தண்ணீர் தேவையான பகுதிக்கு கொண்டு வந்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம் .
இந்த வகையான பனிப்பாறைகள் அண்டார்டிகாவின் பாதுகாக்கப்பட்ட பனிப்பாறையில் இருந்து மிகத் தொலைவில் உள்ளதால் இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்
கொள்ளலாம் என சர்வதேச கடற்பரப்பு சட்ட நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நீர் தேவையை பூர்த்தி செய்வதே இதன் நோக்கம்.
