டிடி-யின் இரண்டாவது திருமணம்
     பிரபல நிகழ்ச்சி  தொகுப்பாளனி மற்றும் நடிகையுமான திவ்யதர்ஷினி(DD)  அவர்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  
       திருமணத்திற்குப் பிறகு கணவன்-      
 மனைவி இருவருக்கும்  சினிமாவில் நடிப்பது பற்றி பல கருத்து வேறுபாடு இருந்து வந்தது.  இதன் காரணமாக  அவர்கள் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தனர். இதனால்  சில நாட்களாக டிடி எந்த ஒரு நிகழ்ச்சித்  தொகுப்பாளினியாக பங்கேற்காமல் விலகி இருந்தார்.
      சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவு வழங்கியதை தொடர்ந்து, டிடி-யின் வீட்டில் இரண்டாவது திருமணத்திற்கு பேச ஆரம்பித்தனர். இதற்கு டிடி-யும் சம்மதம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து  தங்கள் உறவினர் மகனை பேசி முடிக்க இரு வீட்டாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் கூடிய விரைவிலேயே டிடி-யின் திருமண தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என டிடி-யின் குடும்பத்தார் தெரிவித்தனர்.