சீனாவின் நிலை
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ்- க்கு இதுவரை 638 பேர் உயிரிழந்துள்ளனர், காய்ச்சல் அறிகுறியுடன் 31 ஆயிரத்து 161 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி தகவல் அளித்து எச்சரிக்கை செய்த டாக்டர் லீ வென்லியாங் ( 34) கொரோனா வைரஸ் தாக்குதலில் கடந்த வியாழன் உயிரிழந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 பேர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட இருந்ததை கண்டறிந்து தனது கல்லூரி நண்பர்கள் மூலம் “விசாட்” என்ற செயலின் மூலம் மற்ற மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். தற்போது இவர் கொரோனா வைரஸ் மூலம் இறந்தார்.
இந்த சூழ்நிலையில் ஹீபெயிலுள்ள மருத்துவமனைகள் நிரம்பி விட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மேலும் இந்த மருத்துவமனையில் உள்ளவர்கள் அனைவரும் முழு கவசத்துடனும் இருக்கவும், வெளியே இருந்து உள்ளேயும் , உள்ளே இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
மருத்துவமனை பற்றாக்குறையினால் பத்து நாட்களில் 2600 படுக்கைகள் கொண்ட இரண்டு புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டு உள்ளது. சீனாவின் முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் இன்றி தனிமையாக காட்சியளிக்கின்றது.