நடிகர் விஜய் நடித்த பிகில் படத்திற்காக ரூபாய் 30 கோடி சம்பளம் பெறப்பட்டதாக  வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, ஆபீஸ் மற்றும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். சினிமாஸ் சொந்தமான 38 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
      இதில் பைனான்சியர் அன்புச்செழியன் அவர்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்ததன் மூலம் கணக்கில் காட்டாத ரூபாய் 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
      இந்த வருமான வரித்துறை சோதனை மூலம் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் மூலம் ரூபாய் 300 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்து இருக்க கூடும்  என சந்தேகம் உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 
      இன்னொரு புறம் நடிகர் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ட்விட்டர் மூலம் ” We stand with Vijay ” என்ற  ஹேஷ்டேக் உருவாக்கி அதில் மூன்று லட்சத்து 50  ஆயிரம் பேரை தாண்டி இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Tag: # cinema news